உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடேஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

மகுடேஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

கொடுமுடி: பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. வருடந்தோறும் மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி விழா, நடப்பது வழக்கம். வரும் ஜனவரி, 5ல், அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. முன்னதாக ஜனவரி 4, மாலை, 5:00 மணிக்கு, கலச பூஜை, ஹோமம், இரவு, 7:00 மணிக்கு, அபிஷேகம், அலங்காரம், தொடர்ந்து, தீபாராதனை நடக்கிறது. ஜனவரி 5, காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரமும், மாலை 6:30 மணிக்கு மறுஅபிஷேகம், பிரசாதம் வழங்கப்படுகிறது. ஜனவரி 6ம் தேதி, முத்தங்கி அலங்கார சேவை, நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !