உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் வெளிநாட்டு ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரத்தில் வெளிநாட்டு ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு மாலை அணிந்த வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐரோப்பா நாடான செக்குடியரசு நாட்டில் இருந்து 42 பேர் இந்தியா வந்தனர். இந்து மதத்தை தழுவிய இவர்களின் 60 வயதுக்கு மேலான 15 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசிக்க மாலை அணிந்திருந்தனர். இவர்கள் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்த பிறகு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். நேற்று (ஜன., 2ல்) புத்தாண்டையொட்டி கோயிலில் கூட்டம் இருந்ததால், செக்குடியரசு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றனர். அங்கு 60 வயது பூர்த்தியான சான்றிதழுடன் வந்திருந்த செக்குடியரசு பக்தர்கள், ‘ கடந்த மூன்றாண்டுகளாக ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துள்ளதாகவும், வழக்கம் போல் இந்தாண்டும் தரிசனம் செய்ய சபரிமலை செல்வதாக ’ தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !