உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம்:சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்னதான பெருவிழா, திரு அருட்பா இசை நிகழ்ச்சி, சன்மார்க்க கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

காலை அகவல் பாராயணம் மற்றும் சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு மன்ற தலைவர் பால்ராஜ் தலைமையில், துணை தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை யில் பொருளாளர் முத்துகருப்பன் அன்னதானம் வழங்கினார்.

மாலை 6:00 மணிக்கு திருவாருர் நதியாகுமார் குழுவினரின் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சன்மார்க்க கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.மன்ற செயலர் நாராயணன் தலைமை தாங்கினார். கல்கண்டு சிவஞான அடிகள், டாக்டர் நாச்சியப்பன் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் ஜெயம் அண்ணாமலை, நல்லசேவைபுரம் சுப்ரமணிய அடிகளார், மன்னார்குடி சக்திவேல், சென்னை மகாதேவன், தேவியாகுறிச்சி கண்ணன் அடிகளார், திண்டிவனம் நாராயணசாமி, கோட்டை நந்தகுமார், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் செம்பியன், பட்டிமன்ற பேச்சாளர் லட்சுமிபதி ஆகியோர் பேசினர்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !