செங்காட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
ADDED :2497 days ago
திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஆஞ்சநேயர் ஜெயந்தி, சிறப்பு ஹோமங்களுடன் நேற்று துவங்கியது.திருப்போரூர் அடுத்த, செங்காடு கிராமத்தில், சிறப்புபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராமர், சீதை, பரதர், லட்சுமணன், ஹயக்ரீவரர் சன்னிதிகளும் உள்ளன.ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுகிறது.அந்த வகையில், இந்தாண்டு புத்தாண்டு முதல் நாள் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து நேற்று காலை, சுதர்சன யாகசாலை பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி, நாள் முழுவதும் அன்னதானம், பக்தர்கள் பிரார்த்தனை வடமாலை சார்த்தல், ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தல் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.