உத்தரகோசமங்கை சித்தர் கோயிலில் குருபூஜை விழா
ADDED :2562 days ago
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி சூட்டுக்கோல் செல்லப்பசுவாமி சித்தர் கோயிலில் 118ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
மாலையில் 108 விளக்கு பூஜை, 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.பக்தர்கள் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, நாமாவளி, சித்தர்
பாடல்களை பாடினர். சித்தர்களின் வழிபாடு குறித்தஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
சிவலிங்கத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.