உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி ஐயப்பன் கோயிலில் சக்தி பூஜை

கடலாடி ஐயப்பன் கோயிலில் சக்தி பூஜை

கடலாடி: கடலாடி சார் பதிவாளர் அலுவலகம் முன்புறம் உள்ள பூந்தோட்டம் ஐயப்பன் கோயிலில் சக்தி பூஜை நடந்தது.மூலவர் மற்றும் 18 படிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. மலர் சாற்றுதல், புஷ்ப வழிபாடு, பஜனைகள், சரணகோஷம், ஹரிவராசனம் உள்ளிட்டவை பிற்பகல், இரவில் நடந்தது. கன்னிச்சாமி பூஜைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மைக்கான கூட்டுவழிபாட்டில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.கோயில் குருசாமி கருப்பையா, சற்குருநாதர் மகேந்திரபாண்டியன் உள்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !