உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பணவரவு

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பணவரவு

இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக வாழ்கையில் பின்தங்கிய நிலை ஏற்படுமோ என எண்ண வேண்டாம். ஏனெனில் ஜன.30 முதல் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

புதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை, உறவினர் தொல்லை, பொருள் இழப்பு முதலியன ஜன.16க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிப்.1,2ல் சகோதரர் வழியில்  நற்பலன் கிடைக்கும். ஜன.27,28,29ல் உறவினர் வருகையும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.8,9,10 ல்  உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். சுக்கிரனால் ஜன.30க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

பணியாளர்களுக்கு பணியில் பொறுமையும், நிதானமும் தேவை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். புதனால் வேலையில் ஏற்பட்ட வீண் அலைச்சல், பணிச்சுமை முதலியன ஜன.31க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள்  கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். ஜன.25,26ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
பணியிடத்தில்  அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு  ஜன.30க்கு பிறகு சுக்கிரனால் திறமை பளிச்சிடும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

வியாபாரிகள்  கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிக தலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் நிறைந்த உடல் உழைப்பில் அறிவு பூர்வமாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள். ஜன.30க்கு பிறகு சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் பிற்போக்கான நிலை உருவாகாது. உங்களிடம் வேலைபார்க்கும் பணியாட்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவர்.  எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பிப்.1க்கு பிறகு எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது குறுக்கிடும். அவர்கள் வகையில் கவனமுடன் இருக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்  ஜன.16க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம் தேவை. அதே நேரம் ஜன.30க்கு பிறகு சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் படிப்பில் தொய்வு ஏற்படாது.
கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜன.30க்கு பிறகு மறையும். அதன் பிறகு சுக்கிரன் பலத்தால் நற்பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால்  பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஜன.31க்கு பிறகு விடுபடுவர்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பிப்.6,7 ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜன.30க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பொருள் விரயம் ஏற்படலாம். செவ்வாயால் ஜன.31க்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: ஜன.17,18,19, 20,25,26,27,28,29, பிப்.1,2,6,7
* கவன நாள்: ஜன.21,22 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: பச்சை, வெள்ளை

* பரிகாரம்:

●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மனுக்கு தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !