தி.மலையில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2498 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பலவகையான இனிப்புகள், பழங்கள் மற்றும் காய்கனிகளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.