கரும்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன்
ADDED :2549 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி-திருநகரம் சாலியர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், தைப் பொங்கலை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் வழங்கிய கரும்புகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. தைப் பொங்கலை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அம்மனின் சிறப்பு அலங்காரத்தை கண்டுகளித்தனர்.