புல்மேட்டில் பனிமூட்டம் : ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :2498 days ago
மூணாறு: சபரிமலை, பொன்னம்பலமேட்டில் காட்சி தந்த மகரஜோதியை, பலத்த பனிமூட்டத்தால், புல்மேட்டில் இருந்து காண இயலாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சபரிமலையில், பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை, இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம். அப்பகுதிகளில் நேற்று முன்தினம் மகரஜோதியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் பலத்த பனி மூட்டத்தால், புல்மேட்டில் இருந்து மகரஜோதியைக் காண இயலாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.