குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் விழா: சாமுண்டி அழைப்பு வைபவம்
ADDED :2461 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் தொட்டு அப்ப மகா குண்டம் திருவிழாவில், சாமுண்டி அழைப்பு வைபவம் நடந்தது. குமாரபாளையம், ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் தொட்டு அப்ப மகா குண்டம் திருவிழாவில், சக்தி அழைப்பு
வைபவம் நடந்தது. நேற்று முன்தினம், (ஜன., 15ல்) காவிரி ஆற்றங்கரையிலிருந்து சாமுண்டி அழைப்பு வைபவம் துவங்கி, கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆயிரக்கணக் கான வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு, அம்மனை அழைத்து வந்தனர். மாலை, 4:00 மணியளவில் சிறப்பு பூஜை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.