கரியமாணிக்க பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா?
ADDED :2494 days ago
அமரம்பேடு: அமரம்பேடில் உள்ள, பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார், சோமங்கலம் அருகே அமரம்பேடு ஊராட்சி உள்ளது. இங்கு, பழமையான கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தும், இந்த கோவில், பராமரிப்பு இன்றி சிதிலமடைந்துள்ளது. கோவில், நிலங்கள் குத்தகைதாரர்களின் பிடியில் உள்ளன. அவர்களிடம் இருந்து, நீண்ட ஆண்டுகளாக குத்தகை பணத்தை கூட பெற முடியவில்லை. கோவிலை சீரமைத்து, நிலங்களை மீட்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.