உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை வெள்ளமடைப்பிரிவு சப்தகன்னிமார் கோயிலில் கும்பாபிஷேகம்

வடமதுரை வெள்ளமடைப்பிரிவு சப்தகன்னிமார் கோயிலில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை வெள்ளமடைப்பிரிவு சப்தகன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் (ஜன., 17ல்)தீர்த்தக்குடங்கள் அழைப்புடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று (ஜன., 18ல்) காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபி ஷேகம் நடந்தது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !