திருக்கோவிலூர் ரகூத்தமர் சுவாமிகளின் 446வது ஆராதனை விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மணம்பூண்டி ஸ்ரீரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 446வது ஆண்டு ஆராதனை விழாவின் மூன்றாம் நாளான நேற்று (ஜன., 18ல்) மூலபிருந்தாவனம் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தது.
பாவபோதகாரர் என போற்றப்பட்டவரும் உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீ ரகூத்தமதீர்த்த சுவாமிகளின் 446 வது ஆண்டு ஆராதனை விழா திருக்கோவிலூர் மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் கடந்த 16ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜன., 18ல்) அதிகாலை 4:30 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்யபூஜை 5:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் 6:30 மணிக்கு மூலராமர்க்கு பீடாதிபதி ஸ்ரீ சத்யார்த்தமதீர்த சுவாமிகள் பூஜைகள் செய்தார். பிருந்தாவனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பாவபோதகவித்வத் சபா சம்பூர்ணா சுதாபரிஷாவின் சுதாம்ஷ ஆச்சார்யர் வேதம் ஒப்புவித்தல் நடந்தது.மாலை 7:00 மணிக்கு வித்வான்கள் உபன்யாசம் பீடாதிபதி சத்யார்த்தமதீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக இன்று மூலபிருந்தாவனத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.உத்திராதி மடத்தின் பீடாதிபதி உத்தரவின்பேரில் பிருந்தாவன செயலர் ஆனந்ததீர்த்தாசார்ய சிம்மலகி விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.