மலையில் முருகன் கோயில் அமைந்தது ஏன்?
ADDED :2487 days ago
முருகன் என்ற சொல்லுக்கு அழகு என பொருள்.அழகெல்லாம் முருகனே என்று சொல்வது இதனால் தான் முருகனுக்குரிய கோயில்களையும் இய ற்கை அழகு நிறைந்த மலைகள் மீது கட்டினர். ஒளிதரும் சூரியன் கடலில் எழுந்து வருவது எவ்வளவு அழகோ, அதுபோல, நீலமயில் மீது பவனி வரும் முருகனும் அழகாக இருப்பதாக, முருகனை சூரியனுக்கு ஒப்பிடுகிறார் நக்கீரர். அழகு என்பதை முருகு என்பர். மு என்பது விஷ்ணு, ரு என்பது சிவன், கு என்பது பிரம்மாவை குறிக்கும். எனவே, முருகனை வழிபட்டால் ஒரே நேரத்தில் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.