நாகலாபுரம் சிவசக்தி விநாயகர் கோவிலில், சாய்பாபாவிற்கு கும்பாபிஷேகம்
ADDED :2451 days ago
திண்டிவனம்: நாகலாபுரம் சிவசக்தி விநாயகர் கோவிலில், சீரடி சாய்பாபாவிற்கு கும்பாபிஷேகம் நடந்தது.திண்டிவனம், நாகலாபுரம் சின்னமுதலி வீதியில் சிவசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், புதிதாக ஷீரடி சாய்பாபா மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த, 22ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
விழாவையொட்டி அன்று லஷ்மி குபேர ஹோமமும், முதற்கால பூஜைகளும் நடந்தது. நேற்று (ஜன., 23ல்) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, ஷீரடி சாய்பாபா மூலமந்திர ஹோமமும் நடந்தது. காலை 9:50 மணிக்கு, ஷீரடி சாய்பாபா மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.