உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி , அருகே சென்ன கேசவ சென்றாய சுவாமி திருக்கோவில் ராஜகோபுரம் கட்ட பூமி பூஜை

கிருஷ்ணகிரி , அருகே சென்ன கேசவ சென்றாய சுவாமி திருக்கோவில் ராஜகோபுரம் கட்ட பூமி பூஜை

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, வீரபத்திரதுர்க்கம் அருகே, சந்தை மேட்டில், சென்னகேசவ சென்றாய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ராஜகோபுரம் கட்ட திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்து, பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், எம்.பி.,யுமான அசோக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !