உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கரிய காளியம்மனுக்கு கும்பாபிஷேக விழா

உடுமலை கரிய காளியம்மனுக்கு கும்பாபிஷேக விழா

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சியில் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், செங்கோடகவுண்டன்புதூர், கரியன்சாலை கிராம மக்கள் வழிபடும், அனிக்கடவு கரியகாளியம்மன் கோவில்
கும்பாபிஷேகம் நேற்று 27ம் தேதி நடந்தது. விழா, 25ம்தேதி துவங்கியது. நேற்று முன்தினம் (ஜன., 26ல்), கலச பூஜையுடன் மூன்றாம் கால வேள்வி நடந்தது. நேற்று (ஜன., 27ல்) காலை, 6:00 மணிக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி, 6:30 மணிக்கு நான்காம் கால வேள்வி நடந்தது.

தொடர்ந்து, கலசங்களுக்கு தீர்த்தங்கள் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !