கடன் பிரச்னை தீர...
ADDED :2690 days ago
ராமாயணத்தை எழுதிய வால்மீகி, வேடுவனாக வாழ்ந்த போது சிவனை நோக்கி தவம் இருந்த தலம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர். கொன்றை வனமான இங்கு, புற்றின் அடியில் சிவன் காட்சியளித்ததால், ’திருப்புற்றூர்’ என்ற பெயர் உண்டானது. பின் திருப்புத்தூர் என மருவியது. மூலவரை ’திருத்தளிநாதர்’ என்பர்இங்குள்ள யோகபைரவர் கால்பெருவிரலைத் தரையில் ஊன்றியபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தேவலோகத்தின் மீது சூரபத்மன் படையெடுத்த போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் இங்குள்ள யோகபைரவரை வழிபட்டு துயர் நீங்கப்பெற்றான். தேய்பிறை அஷ்டமி, ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) வழிபட்டால் எதிரி தொல்லை, வழக்கு, கடன் பிரச்னை தீரும்.