தை அமாவாசை முன்னிட்டு கடலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :2485 days ago
கடலூர்: தை அமாவாசை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.தை அமாவாசையையொட்டி நேற்று (பிப்., 4ல்) கடலூர் சில்வர் பீச்சில், ஏராளமானோர் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.நேற்று (பிப்., 4ல்) அதிகாலை முதல் கடலூர் சில்வர் பீச்சில் ஏராளமானோர் குவிந்து, ஆங்காங்கே புரோகிதர்களை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். பாடலீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். முன்னதாக கோவில் உள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அகத்திகீரை கொடுத்தனர்.