உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பவனேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா: முகூர்த்த கால் நடும் விழா

கடம்பவனேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா: முகூர்த்த கால் நடும் விழா

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் மாசிமக பெருந்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு, சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும். வரும், 19ல் காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான, 23ல், முற்றிலா முலையம்மை கடம்பவநாதருக்கு பிராயசித்த அபிஷேக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல்அலுவலர் வேல்முருகன், உதவி ஆணையர் சூரிய நாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !