நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா துவக்கம்
ADDED :2432 days ago
வேப்பூர்: நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (பிப்., 10ல்) துவங்கியது.
வேப்பூர் அடுத்த நல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வில்வனேஸ்வரர் கோவிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி பிரஹந்நாயகி, பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மலர்களால் அலங்கரித்து தீபாராதனைகள் நடந்தது.
பின்னர், பகல் 1:30 மணியளவில் கோவிலின் முன் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்ததை தொடர்ந்து, தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது.விழாவின் 9ம் நாள் (18ம் தேதி) காலை 10:00
மணியளவில் நல்லூரின் தேரோட்டமும், 10ம் நாள் (19ம் தேதி) பகல் 2:00 மணியளவில் பஞ்சமூர்த்திகளின் தீர்த்தவாரியும் நடக்கிறது. 20ம் தேதி காலை 8:00 மணியளவில் சண்டிகேஸ்வரர் வீதியுலாவுடன் பெருவிழா முடிகிறது.