ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப திருவிழா
ADDED :2744 days ago
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப திருவிழா நடந்தது. இதில், நம்பெருமாள் விமான பதக்கம், கிளி மாலை அணிந்து, தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.