உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்

அனுப்பர்பாளையம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்

அனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில், ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று (பிப்., 17ல்) நடந்தது.திருப்பூரை அடுத்த, கணக்கம்பாளையம் ஊராட்சியில், பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் உள்ளது. கோவில், கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 17ல்) காலை நடந்தது.காலை, 6:30 மணிக்கு, ஸ்ரீ மாதேஸ்வரனுக்கு நான்காம் கால யாகம், மூல மந்த்ர யாகம், மகா மங்கள தீபாராதனை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடந்தது. பின், வேதாகம முறைப்படி கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ மாதேஸ்வரனுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இயந்திரம் மூலம், தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.மதியம், மகா அபிஷேகம், தச தரிசனம், தச தானம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !