கடவுள் தண்டிப்பதில்லை
* கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார். ஏனெனில் அவர் அன்பானவர்.
* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது. மனிதன் ஏதாவது ஒரு பயனுள்ள குறிக்கோளுடன் வாழ வேண்டும்.
* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது அவசியம்.
* தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள். தெய்வீக சக்தியை எளிதாக அடைய முடியும்.
* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறப்பது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சி.
* உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நம்பிக்கை பரவட்டும். செயலில் ஈடுபட்டு சாதனை படைப்பாய்.
* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. பொறுமை இழப்பதோடு முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.
* பிறர் உன்னை பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்காதே. நல்லதை பாராட்ட யாருக்கும் மனமில்லை.
* ஆன்மிகம் ஒன்றே மேலான உதவி. மற்றதெல்லாம் வெறும் கற்பனையே.
* எப்போதும் அமைதியாக இரு. பேசாமல் இருக்க பழகினால் பிரச்னை வருவதில்லை.
நிறுவுகிறார் ஸ்ரீஅன்னை