தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2553 days ago
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.
சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. எஸ்.வி., ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.