உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் ரூ.35.25 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் ரூ.35.25 லட்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், 35.25 லட்சம் ரூபாய், உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும், காணிக்கை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.இக்கோவில், மாசி பிரம்மோற்சவம், பிப்., 21ல் முடிந்தள்ள நிலையில், கோவிலில் உண்டியல்கள் நேற்று (மார்ச்., 1ல்) திறக்கப்பட்டன.

காஞ்சிபுரம் உதவி ஆணையர், ரமணி, குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர், தியாகராஜன், காஞ்சிபுரம் சரக ஆய்வாளர், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 35.25 லட்சம் ரூபாய், 205 கிராம் தங்கம் மற்றும், 190 கிராம் வெள்ளி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !