சுரண்டை கோயிலில் இருபெரும் விழா
ADDED :4983 days ago
தென்காசி :சுரண்டை கோயிலில் இருபெரும் விழா நடந்தது. சுரண்டை அழகுமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் கோயில் கொடை விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவன்று அதிகாலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புன்னியாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், அபிஷேக தீபாராதனையும், காலை 10 மணிக்கு 1008 சங்கு அபிஷேக பூஜை, ஸ்தபன கலச பூஜை, ஹோமம், தீபாராதனை, 51 வகையான அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், மஹா கும்பாபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு அம்பாள் அலங்கார தீபாராதனை, 508 திருவிளக்கு பூஜையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேனைத்தலைவர் சமுதாய இளைஞரணியினர் செய்திருந்தனர்.