உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு உற்ஸவம்

காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு உற்ஸவம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வகுரணி காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி மஞ்சள் நீராட்டு உற்ஸவம் நடந்தது.

இக்கோயிலில் இத்திருவிழாவையொட்டி சுற்றியுள்ள கிராமபெண்கள் மஞ்சள் நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் கோயில் முன்புள்ள தொட்டியில் ஊற்றுகின்றனர். மாமன், மைத்துனர் முறையுள்ளவர்கள் மஞ்சள் நீரை எடுத்து தெளித்து மஞ்சள் நீராடினர். இப் பகுதியில் மழை பெய்யவும், அம்மனை குளிர்விக்கவும் வேண்டி அறுவடைக்காலம் முடிந்த பின் மகாசிவராத்திரியில் மஞ்சள் நீராட்டு உற்ஸவமும், ஜல்லிக்கட்டும் நடத்தப்பட்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !