உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாண கடற்கரையில் தேங்கிய கடற் புற்களால் பக்தர்கள் அவதி

நவபாஷாண கடற்கரையில் தேங்கிய கடற் புற்களால் பக்தர்கள் அவதி

ராமநாதபுரம்:தேவிபட்டினம் நவபாஷாண கோயில் பகுதியில் கடலில் தேங்கி நிற்கும் கடற்புற்களால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவிபட்டினத்தில் நவபாஷாண கோயில் உள்ளது. கடலில் இருந்து 20 மீ., தொலைவில் கடலுக்குள் நவக்கிரகங்களின் சிலை உள்ளது.

கடலில் பக்தர்கள் செல்வதற்காக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து சென்று நவக்கிரக சிலைகள் உள்ள இடத்தில் பக்தர்கள் புனித நீராடி பின் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு நடத்துவார்கள். தோஷ பரிகார நிவர்த்திக்காக இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். நவபாஷாண கோயில் கடற்கரைப்பகுதியில் கடற்புற்கள் காற்றின் வேகம் காரணமாக கரை ஒதுங்கியுள்ளது.கடற்புற்களுக்கு மத்தியில் குப்பைகளும் கரை ஒதுங்கியிருப்பதால் மக்கள் புனித நீராட தயக்கம் காட்டி வருகின்றனர். கடற்கரைப்பகுதியில் தேங்கியுள்ள புற்களை அகற்றி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !