சரஸ்வதி செய்த தந்திரம்
ADDED :2512 days ago
ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்திருப்பான். படைப்பு கடவுளான பிரம்மாவிடம், “நித்தியத்துவம் (அழியாவரம்) வேண்டும் என கேட்க நினைத்தான். இந்நேரத்தில் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அவன் நாக்கில் அமர்ந்து, ’நித்திரத்துவம்’ என்று சொல்ல வைத்தாள். நித்திரை என்றால் தூக்கம். கும்பகர்ணன் சாகாவரம் பெற்று விட்டால் அண்ணன் ராவணனுக்குப் பிறகு அரசனாக வாய்ப்புண்டு. இதனால் தேவர்கள் துன்பத்திற்கு ஆளாவர் என்பதால் சரஸ்வதி இந்த தந்திரத்தைச் செய்தாள்.