கந்தசுவாமி கோவிலில் இன்று கிருத்திகை விழா
ADDED :2461 days ago
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இன்று, மாசி கிருத்திகை விழா நடைபெறவுள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா நடக்கும். அதன்படி, மாசி கிருத்திகை விழா, இன்று நடைபெறுகிறது.கிருத்திகையை ஒட்டி, பக்தர்கள் சார்பில், காவடிகள் ஊர்வலம், அலகு குத்துதல் உள்ளிட்டவை நடக்கஉள்ளது.மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தாம்பரம், கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, திருப்போரூருக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மற்றும் உபயதாரர்கள் செய்கின்றனர்.