கடலாடியில் முத்தாலம்மன் கோயில் மாசிக்களரி விழா
ADDED :2413 days ago
கடலாடி;கடலாடியில் நன்குடி வெள்ளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாசிக்களரி விழாவை முன்னிட்டு பெண்கள் கூட்டுப்பொங்கல் வைத்தனர். மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். மாலையில் உலக நன்மைக்கான விளக்கு பூஜையில்ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பூசாரி ராமசாமி பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை கோயில் தலைவர் பூப்பாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.