ஓசூரம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
ADDED :2504 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும், மாலை விமானம், சிங்கம், நாகம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.