உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி யானை கஸ்தூரிக்கு புதிய முகப்பு பட்டம்

பழநி யானை கஸ்தூரிக்கு புதிய முகப்பு பட்டம்

பழநி: ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பழநி முருகன்கோயில் கஸ்தூரி யானைக்கு புதிய முகப்பு பட்டம் உபயமாக வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் கஸ்தூரி யானை தங்கியுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்களில் கஸ்தூரி பங்கேற்கும்.பக்தர்களை பெரிதும் கவர்ந்த கஸ்தூரி யானை குளிப்பதற்கு ஷவர், நீச்சல் குளம், அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று (மார்ச்., 15ல்) பழநி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திர பக்தர் ஒருவர் யானைக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தாமிரப் பட்டத்தில் தங்க மூலாம் பூசிய முகப்பு பட்டத்தை உபயமாக வழங்கினார். சிறப்பு பூஜை செய்து, கஸ்தூரி யானைக்கு புதிய முகப்பு பட்டம் அணிவிக்கப்பட்டுள்ளதாக கோயில்
அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !