உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தொடக்கம்

சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தொடக்கம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி மார்ச் 14ம் தேதி இரவு 9:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். இரவு 11:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 8 நாள் மண்டகப்படியாக நடக்கும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்படும்.

விழாவின் கடைசி நாளான மார்ச் 22ம் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்கள் ஏராளமான ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக பலியிட்டு வழிபாடு நடத்துவர். பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஊர்வலமும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !