உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஜோதிமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நாமக்கல் ஜோதிமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல், 32வது வார்டு, ஜெய் நகர், அன்னை சத்யா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன், ராஜ ராஜேஸ்வரி, துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, ஜோதிமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நாளை (மார்ச் 17) கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று (மார்ச்., 15ல்) காலை, மோகனூர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடம் எடுத்து வரப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு, 9:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று (மார்ச்., 16ல்) காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை; நாளை (மார்ச்., 17ல்)அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை, தொடர்ந்து கடம் புறப்பாடு, காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், பக்தர்கள், விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !