கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ கால பூஜை
ADDED :2676 days ago
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 18ல்) பிரதோஷ கால பூஜை நடந்தது.
இதையொட்டி, மாலை 4.30 மணியளவில், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.பின்னர் மூலவர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயன் புறப்பாடுதிருக்கோவிலின் வெளிபிரகாரத்தில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.