வடபழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :2403 days ago
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது.
சென்னை, வடபழனியில் உள்ளது, வடபழனி ஆண்டவர் கோவில். இந்த கோவிலின் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை லட்சார்ச்சனை நடந்தது. பங்குனி உத்திரமான நேற்று முன்தினம் இரவு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடந்தது. இந்நிலையில், மூன்று நாள் தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது. குளத்தில் நீர் குறைவாக உள்ளதால், நிலைத் தெப்ப உற்சவம் நடக்கிறது. நேற்று இரவு, 7:00 மணிக்கு, நிலைத் தெப்பத்தில், வடபழனி ஆண்டவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, சண்முகர், வள்ளி, தெய்வானையும், நாளை சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும் தெப்பத்தில் அருள் பாலிக்கின்றனர்.