உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் நேர்த்திக்கடன்

திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் நேர்த்திக்கடன்

திண்டிவனம்:திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி, பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திர உற்சவ கொடியேற்றம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து செடல் உற்சவ ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று 22ம் தேதி இரவு 9:00 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !