தர்மபுரி 19வது மஹாபாரத பிரசங்க அக்னி விழா
ADDED :2407 days ago
தர்மபுரி: நாயக்கன்கொட்டாய் திரௌபதி அம்மன் கோவிலில், 22 கிராமங்கள் சார்பாக, 19வது ஆண்டு, மஹாபாரத பிரசங்க அக்னி விழா நடந்தது. இவ்விழா கடந்த, 6ல், சந்தனு மகனாய் வந்தனன் விடுமன் பிறப்புடன் துவங்கியது. 9ல், கோகுலம் சிறப்பும், கோபாலன் பிறப்பும், 13ல், வில் வளைத்தலும், திரவுபதி திருமணமும், 17ல், அர்சுணன் தவம், நடந்தது. 21ல், அரவான் கடபலியும், போர் துவக்கவும், 24 காலை, துரியோதனன் படுகளமும், தீமிதி விழா மற்றும் தர்மன் பட்டாபிஷேகமும் நடந்தது.
இதில், மஹாபாரத சொற்பொழிவு, கவி பாடலும் நடந்தது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும், 22 கிராம மக்கள் செய்திருந்தனர்.