பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்
ADDED :5325 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவத்தை முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மூன்றாம் நாள் உற்சவமான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது. முன்னதாக மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பெருமாள் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.