ஆர்.எஸ்.மங்கலம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2698 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தமங்கலம் முருகன் கோவில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்கை, விநாயகர் வழிபாடு, விக்னேஸ்வர் வழிபாடு நடைபெற்றன.அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கும்ப நீர் எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாவிஷேக விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.