ஈரோடு நடயேட்டி மாரியம்மன் கோவில் விழாவில் அலகு குத்தி ஊர்வலம்
ADDED :2475 days ago
ஈரோடு: ஈரோடு, திண்டல், பெரியார் காலனியில், பிரசித்தி பெற்ற, சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 26ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 3ல், பொங்கல் விழாவில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து அன்றிரவு, பக்தர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு, மறுபூஜையுடன், நேற்று விழா நிறைவு பெற்றது.