உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரத்தில் களைகட்டும் பங்குனி திருவிழா

தேவாரத்தில் களைகட்டும் பங்குனி திருவிழா

தேவாரம்: தேவாரம் பங்குனி பொங்கல் திருவிழாவில் தீச்சட்டி, காவடி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அறுவடை முடிந்து கோடை துவங்கும் நிலையில், அடுத்த பருவ விவசாயம் செழிக்க, மழைவளம் வேண்டி கிராமங்களில் பங்குனி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தேவாரத்தில் உள்ள சமுதாய கோயில்களில் மூன்று நாட்கள் இந்த திருவிழா களை கட்டும். கடந்த வியாழனன்று பேச்சியம்மன் கோயில் திருவிழா துவங்கியது. சுவாமி பெட்டி சுமந்து வருதல், பூச்சொரிதல் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, கரகம் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முதல் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. பத்ரகாளியம்மன் கோயிலில் இன்றுகாலை கரகம் சுமந்து திருவிழா துவக்கப்படுகிறது. நாளை பொங்கல்  மற்றும் சுவாமி நகர்வலம் நடைபெறும். பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஏப்., 12 ல் துவங்கும் விழா தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். அனைத்து சமுதாயங்கள் சார்பில் ஏப்., 14 சித்திரை பிறப்பன்று காவடி ஊர்வலம், மஞ்சள் நீராட்டம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !