வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா
வேலூர்: ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்தது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 38வது பிரம்மோற்சவ விழா நேற்று (ஏப்., 8ல்) கொடி ஏற்றத் துடன் தொடங்கியது.
இதையடுத்து, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்பட ஏராள மான பக்தர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, ஜலகண்டேஸ்வரர் கோவில் தரும ஸ்தாபன செயலாளர் சுரேஷ் கூறியதாவது: பிரம்மோற்சவ விழாவை யொட்டி, வரும், 12 மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 13 மாலை, 63 நாயன்மார்கள் உற்சவம், 14 காலை, 9:00 மணிக்கு தேரோட்டம், 17 காலை, 8:30 மணிக்கு, நடராஜர் அபிஷேகம். 17 மாலை, 3:00 மணிக்கு கொடியிறக்கம், மாலையில், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 18 காலை, கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு, 8:30 மணிக்கு, சண்டிகேஸ்வரர் உற்சவம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, 20 மாலை, 6:00 மணிக்கு, உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.