மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2344 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2344 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில், இன்று காலை, கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டின் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று, இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் விநாயகர் உலாவுடன் நிகழ்ச்சி துவங்கியது. இன்று காலை, 6:30 மணி முதல், காலை, 7:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். வரும், 16ம் தேதி தேர் திருவிழாவும், 17ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி உற்சவர் சண்முகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைபெறுகிறது.
2344 days ago
2344 days ago