அனுப்பர்பாளையம் கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா
                              ADDED :2396 days ago 
                            
                          
                           அனுப்பர்பாளையம்:தொரவலூர் கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா இன்று (ஏப்., 10ல்) நடக்கிறது.
திருப்பூரை அடுத்த தொரவலூர் ஊராட்சியில் புகழ்பெற்ற கோட்டை முனியப்பசுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வருவர்.கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 25 தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை முதல் விழா தொடங்குகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக கிடா வெட்டி பொங்கல் வைத்து, கோட்டை முனியப்பனை வழிபடுவர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 12ம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோட்டை முனியப்பன் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.