உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுத்து வைத்த தாய்

கொடுத்து வைத்த தாய்

கல்யாணம் முடிந்தவுடன், தம்பதியர் அம்மி மிதித்து, அருந்ததி, துருவ நட்சத்திரங்களை பார்க்கும் சடங்குகள் நடக்கும். துருவன், அருந்ததி இருவரும் வான மண்டலத்தில் இன்றும் நட்சத்திரங் களாக பிரகாசிப்பதாக ஐதீகம். அருந்ததியைப்போல கற்புத்திறமும், துருவனைப் போல நல்ல குழந்தையும் பெறவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம். துருவன் சிறுவனாக இருந்தபோதே, பக்தி திறத்தால் விஷ்ணுவின் அருளைப் பெற்றான். யாருக்கும் கிடைக்காத துருவபதம் என்னும் உயர்பதவி பெற்றதோடு, தன் தாயான சுநீதிக்கும் நற்கதி பெற்றுத் தந்தான். துருவ நட்சத்திரத்திற்கு அருகில் சுநீதியும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறாள். உத்தமபுத்திரனைப் பெற்ற தாய்மார்கள், கொடுத்து வைத்தவர்கள் என்பதை துருவனின் கதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !