திண்டிவனம் தீவனூரில் பிரமோற்சவ விழா
ADDED :2468 days ago
திண்டிவனம்:தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில் தேரோட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது.திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் பிரமோற்சவ
விழா இன்று 10ம் தேதி காலை 9.20 மணிக்கு கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து 20 ம்தேதி வரை தினமும் சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. 17 ம்தேதி இரவு 10 மணிக்கு பொய்யாமொழி விநாயகருக்கு திருபூநூல் கல்யாணம், 18 ம்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டமும், இரவு 9 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.19ம் தேதி மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவமும், 20ம் தேதி இரவு 10 மணிக்கு முத்து பல்லக்கு உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.